நார்வே தலைமையமைச்சர் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு
2023-05-13 16:37:31

நார்வே தலைமையமைச்சர் ஜோனாஸ் கர் ஸ்டோர், சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான ச்சின் காங்குடன் மே 12ஆம் நாள் ஒஸ்லோ நகரில் சந்திப்பு நடத்தினார்.

ச்சின் காங் கூறுகையில், நார்வேவுடனான உறவுக்கு சீனா முக்கியத்துவம் அளித்து வருகிறது. நார்வேவுடன் தொடர்பை வலுப்படுத்தி, ஒன்றுக்கொன்று நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்புகளை முன்னேற்ற சீனா விரும்புகிறது. சீனப் பொருளாதார வளர்ச்சி, நார்வே உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு வாய்ப்புகளை வழங்கும். பொருளாதாரம் மற்றும் வர்த்தகம், கடல், சமூக நலன், பசுமை வளர்ச்சி முறை மாற்றம் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளும் பயன்தரும் முறையில் ஒத்துழைப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

மேலும், இச்சந்திப்பின்போது உக்ரைன் பிரச்சினை குறித்து இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாற்றிக் கொண்டனர்.