சர்வதேச ஒழுங்கை மீறிய நாடுகள் எவை?
2023-05-13 17:08:50

சீனா சர்வதேச ஒழுங்கைப் பின்பற்ற வேண்டும் என்று ஜப்பானில் நடைபெறவுள்ள ஜி 7 அமைப்பின் உச்சி மாநாட்டில் வேண்டுகோள் விடுக்கப்பட உள்ளதாக ஜப்பான் செய்தி ஊடகங்கள் தகவல் வெளியிட்டன.

ஐ.நா சாசனத்தின் குறிக்கோளையும் கோட்பாட்டையும் அடிப்படையாகக் கொண்ட சர்வதேச உறவு அடிப்படை ஒழுங்கு என்ற ஒரே ஒரு ஒழுங்கு மட்டும் உலகில் உள்ளது. விதியின் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கு என்பதை அமெரிக்கா உள்ளிட்ட ஒரு சில மேலை நாடுகள் அடிக்கடி கூறி வருகின்றன.

இந்த விதி எந்த மாதிரி விதியாகும்? இவ்விதியை வகுப்பவர் யார்?இவ்விதிக்கும், சர்வதேச ஒழுங்கிற்கும் இடையேயான உறவு என்ன?என்று ஐ.நா பாதுகாப்பவையில் சீனாவின் பிரதிநிதி கேள்வி எழுப்பினார். இப்போது வரை இது குறித்து அவர்கள் தெளிவாக பதிலளிக்கவில்லை.

கூறப்படும் விதியில், அமெரிக்கா உள்ளிட்ட ஒரு சில நாடுகள், சர்வதேச ஒழுங்கை மீறி சீர்குலைத்து வருகின்றன.

உலகின் விவகாரங்களை அனைத்து நாடுகளும் கூட்டு விவாதத்தின் அடிப்படையில் கையாள வேண்டும். மாறாக அமெரிக்கா உள்ளிட்ட ஒரு சில நாடுகளால் அதனைத் தீர்மானிக்க முடியாது.