ஷிஆன்-ஆஷ்கபாத் விமானச் சேவை துவக்கம்
2023-05-13 19:14:18

சீனாவின் ஷிஆன் நகரிலிருந்து துர்க்மேனிஸ்தானின் தலைநகர் ஆஷ்கபாத்துக்குச் செல்லும் சர்வதேச விமானச் சேவை மே 13ஆம் நாள் தொடங்கப்பட்டது. இவ்விமானச் சேவை ஒவ்வொரு சனிக்கிழமையும் உண்டு. இதைத் தவிர, ஷிஆன்னிலிருந்து தாஜ்கிஸ்தானின் தலைநகர் துஷான்பேவுக்குச் செல்லும் சர்வதேச விமானச் சேவை மே 18ஆம் நாள் தொடங்கப்பட உள்ளது. அது ஒவ்வொரு வியாழக்கிழமையும் இயங்கும். பண்டைய பட்டுப்பாதையின் துவக்கப்புள்ளியான ஷிஆன்னிலிருந்து 5 மத்திய ஆசிய நாடுகளுக்குச் செல்லும் பயணியர் விமான வழித்தடங்கள் விரைவில் முழுமையாக நிறைவேற்றப்பட உள்ளதை இது காட்டுகிறது.

புதிய விமான வழித்திடங்களின் திறப்பு, மத்திய ஆசிய நாடுகளைச் சேர்ந்த பல்வேறு துறையினர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த விமானச் சேவை, சீனாவுக்கும் மத்திய ஆசிய நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகத் தொடர்புகளை ஊக்குவிப்பதோடு, சுற்றுலா வளர்ச்சி மற்றும் மானுட பண்பாட்டு பரிமாற்றத்தையும் மேம்படுத்தும் என்று கருதப்படுகிறது.