எரித்திரியா, சியராலியோன், சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் அதிகாரிகள் சீனாவில் பயணம்
2023-05-13 19:10:48

சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹுவா ச்சுன்யிங் அம்மையார் மே 12ஆம் நாள் கூறுகையில், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கின் அழைப்பை ஏற்று, எரித்திரியா அரசுத் தலைவர் மே 14ஆம் நாள் முதல் சீனாவில் அரசு முறை பயணம் மேற்கொள்ள உள்ளார் என்றார்.

அதே போல், சியராலியோன் வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்புத் துறை தலைவர் மே 15 முதல் 18ஆம் நாள் வரை சீனாவில் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொள்வதாகவும், சிங்கப்பூர் தலைமையமைச்சரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங் 13 முதல் 17ஆம் நாள் வரை சீனாவில் பயணம் மேற்கொள்வதாகவும் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் 12ஆம் நாள் தெரிவித்தார்.