இந்தியாவில் கடந்த 18 மாதங்களில் மிகக் குறைந்த சில்லறை பணவீக்கம்
2023-05-13 16:49:51

இந்தியாவின் சில்லறை பணவீக்கம் ஏப்ரலில் 4.7 விழுக்காட்டை எட்டி, கடந்த 18 மாதங்களில் மிகக் குறைவாகப் பதிவாகியது என்று வெள்ளிக்கிழமை வெளியான அதிகாரப்பூர்வ தரவு காட்டியது.

இந்த பணவீக்கம் பிப்ரவரியில் 6.44 விழுக்காடகாவும், மார்ச் மாதத்தில் 5.66 விழுக்காடாகவும் இருந்தது.

தற்போதைய தரவு, அனைத்து மாநிலங்களிலும் தெரிவு செய்யப்பட்ட 1114 நகரப்புற சந்தைகள் மற்றும் 1181 கிராமங்களிலிருந்து புள்ளியியல் பணியகத்தின் கள ஆய்வுப் பணயாளர்களால் சேகரிக்கப்பட்டது.

இந்தியாவின் சில்லறை பணவீக்கம் தொடர்ந்து 2 மாதங்களாக மத்திய வங்கி வகுத்த உகந்த வரம்புக்குள் இருப்பதற்கு உணவு விலை குறைவு முக்கிய காரணமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.