2023ஆம் ஆண்டு சீன வணிகச் சின்னத் தினத்துக்கான நிகழ்வு
2023-05-14 16:31:48

 

ஷாங்காய் மாநகரில் நடைபெற்ற 2023ஆம் ஆண்டு சீன வணிகச் சின்னத் தினத்துக்கான நிகழ்வில் சீனத் துணைத் தலைமை அமைச்சர் டிங் சுய்சியாங் மே 13ஆம் நாள் பங்கேற்று, சீன வணிகச் சின்ன வளர்ச்சி பற்றிய சர்வதேச கருத்தரங்கில் உரை நிகழ்த்தினார்.

வணிகச் சின்னமானது உயர்தர வளர்ச்சிக்கான முக்கிய அடையாளமாகும். வணிகச் சின்ன வளர்ச்சியை வலுப்படுத்துவது, இன்பமான வாழ்க்கைக்கான பொது மக்களின் தேவையைப் பூர்த்தி செய்யக் கூடிய முக்கிய வழிமுறையாகும் என்று அவர் குறிப்பிட்டார். இதற்காக, முதலில், வணிகச் சின்ன வளர்ச்சியைக் கூட்டாக பாதுகாத்து, தொடர்புடைய அறிவு சார் சொத்துரிமைக்கான சர்வதேச விதிமுறை மற்றும் தரநிர்ணயத்தின் முழுமையாக்கத்தை முன்னேற்ற வேண்டும். இரண்டாவதாக, வணிகச் சின்ன வளர்ச்சியில் அனுபவங்களின் பரிமாற்றத்தை வலுப்படுத்தி, அதன் உயர்தர வளர்ச்சியை மேம்படுத்த வேண்டும். மூன்றாவதாக, வணிகச் சின்னத்தின் உலகளாவிய பகிர்வை ஊக்குவித்து, பல்வேறு நாடுகளின் மக்களுக்கு மேலதிக தரமான தயாரிப்புகளையும் சேவைகளையும் வழங்க வேண்டும் என்றும் அவர் முன்மொழிந்தார்.