சீன-மத்திய ஆசிய உச்சி மாநாட்டுக்கு ஷிஆன் தயார்!
2023-05-14 15:59:25

சீன-மத்திய ஆசிய உச்சி மாநாடு ஷான்ஷி மாநிலத்தின் ஷிஆன் நகரில் மே 18 மற்றும் 19ஆம் நாள் நடைபெறவுள்ளது. இம்மாநாட்டை முன்னிட்டு, ஷிஆனில் கோலாகலமான மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகியுள்ளது. பல்வேறு இடங்களைச் சேர்ந்த விருந்தினர்களுக்கு தரமான சேவையளிக்கும் வகையில் அந்நகரின் பல்வேறு துறையினர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இந்நகரிலுள்ள முக்கிய வணிகப் பகுதிகள் மற்றும் காட்சியிடங்களில், இம்மாநாட்டுக்கான பிரச்சாரக் காணொளி ஒளிபரப்பப்படுகிறது. மேலும், வாடகைச் சிற்றுந்து, தொடர்வண்டி உள்ளிட்ட பல்வேறு சேவை துறையினர்களும் ஆயத்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.