தைவான் பிரச்சினையில் அமெரிக்காவின் தலையீட்டுக்கு சீனா எதிர்ப்பு
2023-05-14 16:31:31

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் அண்மையில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், பார்வையாளராக உலகச் சுகாதாரச் சபையின் கூட்டத்தில் கலந்து கொள்ள தைவானுக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்று உலகச் சுகாதார அமைப்பைத் தூண்டிவிட்டார். அமெரிக்காவின் தூண்டுதலுடன், விரைவில் நடத்தப்படும் ஏழு நாடுகள் குழுவின் உச்சி மாநாட்டில் “சீன அச்சுறுத்தல்” என்ற கருத்து பரவல் செய்யப்படும். இந்நிலையில், தைவான் பிரச்சினையும் கவனம் செலுத்தப்படும் என்று பல ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த சில ஆண்டுகளாக, அமெரிக்காவை மையமாகக் கொண்டு சில மேலை நாடுகள் தைவான் பிரச்சினையில் பலமுறை தலையிட்டு வருகின்றன.

தைவான் பிரச்சினை, சீனாவின் மைய நலன்களிலுள்ள முக்கிய பகுதியாகும். ஒரே சீனா என்ற கோட்பாடு, சர்வதேசச் சமூகத்தின் பொதுக் கருத்து மற்றும் சர்வதேச உறவின் அடிப்படை கோட்பாடாகவும், பல்வேறு நாடுகளுடன் சீனா தூதாண்மை உறவை உருவாக்கிய அரசியல் அடிப்படையாகவும் திகழ்கிறது.

கடந்த சில ஆண்டுகளாக, வளரும் நாடுகளின் சீரான வளர்ச்சியுடன், உலகத்தில் ஏழு நாடுகளின் பங்கு குறைந்து வருகிறது. அமெரிக்காவின் மேலாதிக்கப்போக்கைப் பேணிக்காக்கும் கருவியாக இக்குழு மாறியுள்ளது.

உலகத்தில் ஒரே ஒரு சீனா உள்ளது. தைவான், சீனாவின் ஒரு பகுதியாகும். ஒரே சீனா என்ற கோட்பாடு சர்வதேசச் சமூகத்தில் பெரும் ஆதரவைப் பெற்றுள்ளது. தைவான் பிரச்சினையில் தலையிட்டு வருகின்ற அமெரிக்காவுக்கு, சீனா உறுதியாக எதிர்ப்பு தெரிவிக்கிறது.