ஜி7 உச்சி மாநாட்டுக்கு ஜப்பானியர்கள் எதிர்ப்பு
2023-05-14 17:07:41

ஜி7 அமைப்பின் உச்சி மாநாடு, ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் நடைபெறவுள்ளது. ஜப்பானின் தலைமை அமைச்சர் கிஷிடா 13ஆம் நாள் அங்கே சோதனை பயணம் மேற்கொண்டார். அன்று, ஜப்பான் பொது மக்கள், பேரணி மூலம், இவ்வுச்சி மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஹிரோஷிமாவில் ஜி7 உச்சி மாநாட்டை விசாரணை செய்யும் ஜப்பான் பொது மக்கள் குழுவின் செயல் கமிட்டி, இப்பேரணிக்கு ஏற்பாடு செய்தது.

ஜி7 அமைப்பின் ஹிரோஷிமா உச்சி மாநாடு, ஜனநாயகம் என்ற பெயரில், ராணுவ கூட்டணியை ஏற்படுத்தும். இதர நாடுகள் தங்கள் கோரிக்கையைப் பின்பற்ற வேண்டும் என்று இக்குழுவிலுள்ள பெரிய நாடுகள் கட்டாயப்படுத்துவதாக அன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.