இவ்வாண்டின் முதல் காலாண்டில் சீன வாகனங்களின் ஏற்றுமதி அதிகரிப்பு
2023-05-15 10:14:01

சீனச் சுங்கத் துறை தலைமைப் பணியகம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி இவ்வாண்டின் முதல் 4 திங்கள் காலத்தில், சீனாவின் சரக்குகளின் வர்த்தக ஏற்றுமதித் தொகை, 7 இலட்சத்து 67 ஆயிரம் கோடி யுவானாகும். இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 10.6 விழுக்காடு அதிகமாகும். சீன வாகனத் தொழிற்துறை சங்கம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி இவ்வாண்டின் ஏப்ரல் திங்களில், சீனாவின் வாகனங்களின் ஏற்றுமதி எண்ணிக்கை, 3 இலட்சத்து 76 ஆயிரமாகும். இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 1.7 மடங்கு அதிகமாகும்.

ஜனவரி முதல் ஏப்ரல் வரை, சீனாவில்  13 இலட்சத்து 70 ஆயிரம் வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 89.2 விழுக்காடு அதிகமாகும்.