யுன்னான் சாவ்தோங் லொகொத் சந்தையில் விற்பனை
2023-05-15 15:19:54

யுன்னான் சாவ்தோங்கில், 8000 மு பரப்பளவில் லொகொத் பழங்கள் முதிர்ச்சி  அடைந்துள்ளது. உள்ளூர் மக்கள், லொகொத் பழங்களை பறிந்து பொட்டலமாக்குகின்றனர். இவ்வாண்டு, இங்குள்ள லொகொத் பழங்களின் உற்பத்தித் தொகை 3500 டனைத் தாண்டும். இதன் உற்பத்தி மதிப்பு 3 கோடியே 35 இலட்சம் யுவானாகும். லொகொத் உற்பத்தித் துறை, உள்ளூர் மக்கள் வருமானத்தை அதிகரிக்கும் முக்கிய துறையாக திகழ்கிறது. கிராமப்புறத்தின் விரைவான வளர்ச்சிக்கு இத்துறை துணை புரிகிறது.