“பொருளாதார அச்சுறுத்தல்”என்ற தந்திரத்தைச் செயல்படுத்தியவர் யார்?
2023-05-15 09:54:23

சீனாவின் “பொருளாதார அச்சுறுத்தலை” எதிர்க்கும் விதம், ஒருங்கிணைந்து செயல்படுமாறு அமெரிக்க நிதி அமைச்சர் ஜேனட் எல்ன் அண்மையில் 7நாடுகள் குழுவின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கித் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்ற போது வேண்டுகோள் விடுத்தார். “பொருளாதார அச்சுறுத்தலை” செயல்படுத்தியவர் யார், அதில் பாதிக்கப்பட்டவர் யார் என்பதை உண்மைகள் நன்றாக நிரூபித்துள்ளன.

“அச்சுறுத்தல்” என்ற கருத்தை அமெரிக்கா தான் உருவாக்கியது. அமெரிக்கா தான் அதைச் செயல்படுத்தி வருகிறது. அமெரிக்காவின் மேலாதிக்கத்தை இயன்ற அளவில் பேணிக்காக்க, ஆயுத அச்சுறுத்தல், அரசியல் தனிமைப்படுத்துதல், பொருளாதாரத் தடை, தொழில்நுட்ப முற்றுகை முதலியவற்றை பயன்படுத்தி, பிற நாடுகளை அமெரிக்காவின் கோரிக்கையின்படி மாற்றக் கட்டாயப்படுத்துவது இக்கருத்தின் மைய அம்சமாகும்.

மேலும், இவ்வாண்டின் 7 நாடுகள் குழு உச்சிமாநாட்டின் போது, சீனாவின் மீது முன்பு காணாத முதலீட்டுத் தடை விதிகளை அமெரிக்கா அறிவிக்க போவதாக அந்நாட்டு செய்தி ஊடகங்கள் அண்மையில் இடைவிடாமல் தகவல் வெளியிட்டு வருகின்றன. செமிகண்டக்டர், செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் கம்ப்யூட்டிங் உள்ளிட்ட உயர் தொழில்நுட்பத் துறைகளில் இத்தடை விதிகள் அடங்குமென கூறப்பட்டது. இந்த தகவல் உண்மையாக இருந்தால், சீனா மீது அமெரிக்கா “பொருளாதார அச்சுறுத்தலை”செயல்படுத்தி சீனாவின் வளர்ச்சியைத் தடுப்பதற்கான இன்னொரு சாட்சி இதுவாகும்.

அமெரிக்காவை பொறுத்தவரை, நித்திய நண்பர்கள் இல்லை. நித்திய நலன் மட்டுமே இருக்கும். அதன் கூட்டணி நாடுகளுக்குக் கூட, அமெரிக்கா “பொருளாதார அச்சுறுத்தலை” மேற்கொண்டுள்ளது. குறிப்பாக கடந்த நூற்றாண்டின் 80ஆம் ஆண்டுகளில், ஜப்பான் மீது அமெரிக்கா பன்முறையாகப் பொருளாதார தடை நடவடிக்கைகளை மேற்கொண்டது. செமிகண்டக்டர் அரை மின் கடத்தி உள்ளிட்ட ஜப்பானின் சாதகமான தொழில்களை அமெரிக்கா ஆயிரத்தெட்டு வழிகளில் தடை செய்தது குறிப்பிடத்த்க்கது.