சீன-ஹங்கேரி வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்பு
2023-05-15 16:57:39

சீன அரசவையின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான சின் காங், 15ஆம் நாள் பெய்ஜிங்கில் ஹங்கேரி வெளியுறவு அமைச்சர் சிஜார்டோவைச் சந்தித்துரையாடினார். அவர் கூறுகையில்,

பிரதிநிதிக் குழுவுக்குத் தலைமை தாங்கி, சீனா-மத்திய கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் பொருட்காட்சியில் கலந்துகொண்டது, சீன-மத்திய கிழக்கு ஐரோப்பிய நாட்டு ஒத்துழைப்பின் மீதான ஆதரவையும் இரு நாட்டுறவின் மீதான கவனத்தையும் வெளிகாட்டுகிறது என்றார்.

சிஜார்டோ கூறுகையில்,

சீனாவை, நெடுநோக்கு ஒத்துழைப்பு கூட்டாளியாகவும் முக்கிய வளர்ச்சி வாய்ப்பாகவும் ஹங்கேரி கொண்டுள்ளது. சீன-மத்திய கிழக்கு ஐரோப்பிய ஒத்துழைப்புக்கும் ஐரோப்பிய-சீன உறவுக்கும் ஹங்கேரி உறுதியாக ஆதரவளிக்கும் என்றார்.