2023ஆம் ஆண்டு ZGC கருத்தரங்கு துவங்கவுள்ளது
2023-05-15 16:35:16

ட்சொங்குவான்ச்சுன் பிரதேசம், சீனாவின் முதலாவது தேசிய நிலை தற்சார்புப் புத்தாக்கத்துக்கான முன்மாதிரி மண்டலமாகும். 2023ஆம் ஆண்டு ZGC கருத்தரங்கு மே 25 முதல் 30ஆம் நாள் வரை பெய்ஜிங்கில் நடைபெறவுள்ளது. “திறப்புடன் ஒத்துழைத்து, எதிர்காலத்தைப் பகிர்ந்து கொள்வது”என்ற தலைப்பிலான இந்தக் கருத்தரங்கில் 150 நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

மேலும், அறிவியல் ஆராய்ச்சி சாதனைகள் மற்றும் செல்வாக்கு வாய்ந்த ஆய்வு அறிக்கைகள் வெளியிடப்படும்.

சர்வதேசமயமாக்கம், உயர்நிலை மயமாக்கம், தொழில் சின்ன மயமாக்கம் ஆகியவை, நடப்பு கருத்தரங்கின் முக்கிய தனிச்சிறப்பாகும். 2007ஆம் ஆண்டு முதல் இதுவரை, இக்கருத்தரங்கு 13 முறை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தின் திறப்பான ஒத்துழைப்புகளை ஆழமாக்குவதற்கு இது முக்கியப் பங்காற்றியுள்ளது.