ஹாங்காங் விவகாரத்தில் அமெரிக்கா தலையிடக் கூடாது:சீனா
2023-05-15 17:34:17

அமெரிக்க நாடாளுமன்றத்தின் சீனா பற்றிய நிர்வாக  ஆணையம், ஹாங்காங் பற்றிய கேட்டறிதல் கூட்டம் ஒன்றை நடத்தி அறிக்கையை வெளியிட்டது. இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் வாங் வென்பின் 15ஆம் நாள் கூறுகையில்,

ஹாங்காங் விவகாரம் சீனாவின் உள் விவகாரமாகும்.  வெளிப்புற சக்திகள் இதில் தலையிட கூடாது என்றார்.

அனைத்து வழிமுறைகளின் மூலம், ஹாங்காங் விவகாரத்திலும் சீன உள் விவகாரங்களிலும் தலையீடு செய்வதையும் ஹாங்காங் செழுமையை சீர்குலைப்பதையும் அமெரிக்கா உடனே நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.