பல்வேறு நாட்டு மக்களுக்கு நன்மை புரிந்த சீன-மத்திய ஆசிய ஒத்துழைப்பு
2023-05-16 17:03:10

சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் மே 16ஆம் நாள் கூறுகையில், 2013ஆம் ஆண்டு செப்டம்பரில் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் கசகஸ்தானில் பட்டுப்பாதை பொருளாதார மண்டலக் கட்டுமானம் பற்றிய முன்மொழிவை முன்வைத்தார். அதைத் தொடர்ந்து, மத்திய ஆசியாவைச் சேர்ந்த 5 நாடுகளின் அதிபர்களுடன் அவர் நெருக்கமாகத் தொடர்பு கொண்டு வருகின்றார். ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவை, மத்திய ஆசிய நாடுகளின் வளர்ச்சித் திட்டத்துடன் ஒன்றிணைப்பது குறித்து பல்வேறு தரப்பினர்கள் முக்கிய பொதுக் கருத்துக்களை உருவாக்கினர் என்றார்.

மேலும், கடந்த 10 ஆண்டுகளாக, சீனாவும், மத்திய ஆசிய நாடுகளும் பல முக்கிய திட்டப்பணிகளைச் செயல்படுத்தி, பிரதேச மற்றும் பல்வேறு நாட்டு மக்களுக்கு நன்மை புரிந்துள்ளன. 2022ஆம் ஆண்டு, இரு தரப்புகளின் மொத்த வர்த்தகத் தொகை 7000 கோடி அமெரிக்க டாலரைத் தாண்டி, வரலாற்றில் புதிய சாதனையை உருவாக்கியுள்ளது. சீன-மத்திய ஆசிய உச்சி மாநாடு விரைவில் ஷிஆனில் நடைபெறவுள்ளது. இரு தரப்பும் உயர் தரத்துடன் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்தை முன்னேற்றும் பொதுக் கருத்தை இம்மாநாடு தொடர்ந்து வலுப்படுத்தும் என்றும் வாங் வென்பின் தெரிவித்தார்.