ஆர்ஜென்டினாவில் வட்டி விகதம் மீண்டும் உயர்வு
2023-05-16 15:39:15

ஆர்ஜென்டினாவில் அடிப்படை வட்டி விகிதத்தை 91 விழுக்காட்டில் இருந்து 97 விழுக்காடாக உயர்த்துவதாக அந்நாட்டு மத்திய வங்கி 15ஆம் நாள் அறிவித்தது. இவ்வாண்டில் வட்டி விகிதத்தை உயர்த்துவது, இதுவே 4வது முறையாகும்.

ஆர்ஜென்டினாவின் தேசியப் புள்ளிவிவரம் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆய்வகம் 12ம் நாள் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், ஏப்ரல் மாதத்தில் ஆர்ஜென்டினாவில் பணவீக்க விகிதம் 8.4 விழுக்காடு ஆகும். கடந்த 12 திங்களில், மொத்தப் பணவீக்க விகிதம், 108.8 விழுக்காடு. இவ்வாண்டில் மொத்தப் பணவீக்க விகிதம், 32 விழுக்காடு ஆகும் என்று தெரிவிக்கப்பட்டது.

சிக்கலான பணவீக்கப் போக்கை எதிர்கொண்ட ஆர்ஜென்டீனா மத்திய வங்கி, மார்ச் மற்றும் ஏப்ரலில், மொத்தம் 3 முறை, அடிப்படை வட்டி விகிதத்தை 75இலிருந்து 91 விழுக்காடாக உயர்த்தியுள்ளது.