அமெரிக்காவின் கடன் உச்ச வரம்புப் பிரச்சினை பற்றி பேச்சுவார்த்தை
2023-05-16 15:42:58

அமெரிக்க அரசுத் தலைவர் ஜோ பைடனும் பிரதிநிதிகள் அவைத் தலைவர் கெவின் மெக்கார்த்தியும் 16ஆம் நாள் கடன் உச்ச வரம்புப் பிரச்சினை பற்றி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அந்நாட்டின் உயர் அதிகாரி ஒருவர் 15ஆம் நாள் தெரிவித்தார்.

அமெரிக்க நாடாளுமன்றம் ஃபெடரல் கடன் உச்ச வரம்பை உயர்த்தாமல் அல்லது இடைநிறுத்தாமல் இருந்தால், கூடிய விரைவில் ஜூன் முதல் நாளுக்குள் அமெரிக்க நிதித் துறையின் கையில் பணம் இருக்காது என்று அதே நாள் அந்நாட்டின் நிதி அமைச்சர் ஜேனட் எல்லன் மீண்டும் எச்சரிக்கை விடுத்தார்.