உக்ரைன் நெருக்கடியின் அரசியல் தீர்வுக்கு சீனப் பிரதிநிதி வேண்டுகோள்
2023-05-16 16:52:45

உக்ரைன் மனிதநேய பிரச்சினை பற்றி ஐ.நா. பாதுகாப்பவை நடத்திய வெளிப்படை கூட்டத்தில், ஐ.நாவுத்தான சீனாவின் நிரந்தரப் பிரதிநிதி சாங் ஜுன் மே 15ஆம் நாள் உரை நிகழ்த்துகையில், சர்வதேச சமூகம் மிகப்பெரிய அவசர உணர்வுடன் உக்ரைன் நெருக்கடியின் அரசியல் தீர்வை முன்னேற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

மோதலால் ஏற்படும் பின்விளைவைக் குறைக்கும் விதம், சர்வதேச சமூகம் செயலாக்க நடவடிக்கையை மேற்கொண்டு, நிலைமையைத் தணிவு செய்வதற்கும் போர் நிறுத்தத்தை கூடிய விரைவில் நனவாக்குவதற்கும் கூட்டு முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.