பெர்லினில் உலகளாவிய தீர்வுகள் பற்றிய மாநாடு
2023-05-16 17:26:37

 

2023ஆம் ஆண்டு உலகளாவிய தீர்வுகள் பற்றிய மாநாடு மே 15ஆம் நாள் ஜெர்மனியின் பெர்லின் நகரில் துவங்கியது. தற்போதைய முறைமை சார் நெருக்கடிகள் மற்றும் அவசியமான தீர்வுகள் குறித்து, ஜி20 அமைப்பின் அரசியல் தலைவர்கள், நிபுணர்கள், வணிகத் துறையினர்கள் ஆகியோர் 2 நாட்கள் நடைபெற்ற இம்மாநாட்டில் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

ஜெர்மன் தலைமை அமைச்சர் ஸ்கோல்ஸ் இம்மாநாட்டில் பங்கேற்று உரை நிகழ்த்தினார். பலதுருவமயமான உலகிற்கு பலதரப்பு ஒத்துழைப்பு மிக முக்கியமானது. பல்வேறு தரப்புகளும் கூட்டாகச் செயல்பட்டு புதிய தொழில் நுட்ப வளர்ச்சியை முன்னேற்றினால் தான், ரஷிய-உக்ரைன் மோதல், காலநிலை மாற்றம் உள்ளிட்ட உலகளாவிய சவால்களைச் சமாளிக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, உலகளாவிய சவால்களைக் கையாளும் போக்கில் சீனாவுடனான ஒத்துழைப்பு இன்றியமையாதது. இதில் சீனா முக்கியப் பங்காற்றும் என்று இம்மாநாட்டில் கலந்து கொண்ட பிரமுகர்கள் தெரிவித்தனர்.