ஹங்கேரி வெளியுறவு அமைச்சருடன் வாங்யீ சந்திப்பு
2023-05-16 16:17:31

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், வெளிவிவகார ஆணையப் பணியகத் தலைவருமான வாங்யீ, ஹங்கேரி வெளியுறவு அமைச்சர் சிஸிஜார்டோவுடன் மே 15ஆம் நாள் பெய்ஜிங்கில் சந்திப்பு நடத்தினார்.

வாங்யீ கூறுகையில், சீனாவின் வளர்ச்சி, அமைதியான ஆற்றலின் வளர்ச்சியாகும். சீனாவும் ஹங்கேரியும் ஒன்றுக்கொன்று மதிப்பு, நம்பிக்கை மற்றும் ஆதரவு அளித்து, இரு நாட்டுறவை முன்னேற்றி வருகின்றன. ஹங்கேரி உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் இணைந்து, உண்மையான பலதரப்புவாதத்தைப் பேணிக்காத்து, சர்வதேச உறவின் ஜனநாயகமயமாக்கப் போக்கை முன்னேற்ற சீனா விரும்புகிறது என்றார்.

ஹங்கேரியில் முதலீட்டைச் சீனா அதிகரிப்பது வரவேற்கப்படுகிறது. சீனாவுடன் இணைந்து பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பின் தரத்தை உயர்த்தி, இரு நாட்டுறவை புதிய கட்டத்துக்கு கொண்டு செல்ல ஹங்கேரி விரும்புகிறது என்று சிஸிஜார்டோ தெரிவித்தார்.