சீன-சியாரா லியோன் வெளியுறவு அமைச்சர்களின் பேச்சுவார்த்தை
2023-05-16 15:56:57

சீன அரசவையின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான சின் காங், சியாரா லியோன் வெளியுறவு அமைச்சர் ஃபொலாங்சிஸுடன் 16ஆம் நாள் பெய்ஜிங்கில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

சின் காங் கூறுகையில்,

ஒரே சீனா என்ற கொள்கையிலும் சீனாவின் சின்ஜியாங் மனித உரிமை பிரச்சினை குறித்து நேர்மையிலும் ஊன்றி நிற்கின்ற சியாரா லியோனுக்கு சீனா பாராட்டு தெரிவிக்கின்றது. இரு நாடுகள், இரு நாட்டு அரசுத் தலைவர்களின் பொதுக் கருத்தை நடைமுறைப்படுத்தி, ஒத்துழைப்புகளை வலுப்படுத்த வேண்டும். வலிமைமிக்க பொருளாதார ஆற்றலைக் கொண்ட சீனா, சியாரா லியோனுடன் வாய்ப்புகளைப் பகிர்ந்து, கூட்டாக வளர விரும்புகின்றது என்றார்.

ஃபொலாங்சிஸ் கூறுகையில்,

இருதரப்புகளுக்கிடையில் நிறைய பொது நலன்கள் உள்ளன. உலக அமைதியையும் நிதானத்தையும் பேணிக்காக்கும் சீனாவை சியாரா லியோன் உயர்வாக பாராட்டுகிறது என்றார்.