ஏப்ரலில் சீனாவில் சில்லறை விற்பனை 18.4% அதிகரிப்பு
2023-05-16 15:38:30

சீனாவில் ஏப்ரலில் நுகர்வுப் பொருட்களின் சில்லறை விற்பனை 3 இலட்சத்து 49 ஆயிரத்து 100 கோடி யுவானை எட்டி, கடந்த ஆண்டை விட 18.4 விழுக்காடு அதிகரித்ததாகத் தேசியப் புள்ளிவிபரப் பணியகம் தெரிவித்துள்ளது. வாகனங்களைத் தவிர நுகர்வுப் பொருட்களின் சில்லறை விற்பனை 3 இலட்சத்து 12 ஆயிரத்து 900 கோடி யுவான். இது, கடந்த ஆண்டை விட 16.5 விழுக்காடு அதிகமாகும். மேலும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை, சில்லறை விற்பனை 14இலட்சத்து 98 ஆயிரத்து 330 கோடி யுவானாகும். இது, கடந்த ஆண்டை விட 8.5 விழுக்காடு அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.