அணுக்கழிவு நீரை வெளியேற்றுவதற்கு ஜப்பானியர்கள் எதிர்ப்பு
2023-05-17 15:43:36

ஃபுகுஷிமா அணு மின் நிலையத்திலிருந்து அணுக்கழிவு நீரை கடலில் வெளியேற்றுவது உள்நாட்டுக்கு மட்டுமல்ல, அண்டை நாடுகள் மற்றும் உலகின் கடல் சுற்றுச்சூழலுக்கும் தீங்கு விளைவிக்கும் என்று அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் 16ஆம் நாள் நடைபெற்ற எதிர்ப்பு நடவடிக்கையில் தெரிவித்தனர்.

மக்களின் புரிந்துணர்வு மற்றும் அனுமதி இல்லாமல் அணுக்கழிவு நீரைக் கடலில் வெளியேற்றும் செயலை ஜப்பான் அரசு நிறுத்த வேண்டும் என்று இந்நடவடிக்கையில் பங்கேற்ற பொது மக்கள் அந்நாட்டுத் தலைமை அமைச்சர் ப்யூயோ கிசிடா மற்றும் பிரதிநிதிகள் அவைத் தலைவருக்கு வழங்கிய மனு தாக்கலில் கோரிக்கை விடுத்தனர்.