கிராமப்புறங்களில் புதிய ஆற்றல் வாகனங்களின் பயன்பாட்டுக்கு சீனா ஆதரவு
2023-05-17 17:19:39

சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையம், தேசிய எரியாற்றல் நிர்வாகம் ஆகியவை அண்மையில் வெளியிட்ட ஆவணம் ஒன்றில், கிராமப்புறங்களில் மின்னூட்ட உள்கட்டமைப்பின் கட்டுமானம், செயல்பாடு மற்றும் பராமரிப்பு மாதிரியைப் புத்தாக்கம் செய்து, புதிய ஆற்றல் வாகனங்களின் விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு அரசு ஆதரவளிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பொது மின்னூட்ட அடிப்படை வசதிகளின் அமைவுத் திட்டத்தை வலுப்படுத்துவது, குடியிருப்புப் பகுதிகளில் மின்னூட்ட வசதிகளின் கட்டுமானம் மற்றும் பகிர்வை முன்னேற்றுவது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மின்னூட்ட வசதிகளை ஓரளவில் முன்கூட்டியே கட்டமைத்து, புதிய ஆற்றல் வாகனங்களை வாங்கிப் பயன்படுத்துவதற்கான சூழலை மேம்படுத்துவது, கிராமப்புறங்களில் குடிமக்களின் பசுமையான பயணத்துக்கு வழிகாட்டுவதற்கும், கிராமப்புற பன்முக வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் பொறுப்பாளர் ஒருவர் தெரிவித்தார்.