சீன-மத்திய ஆசிய உச்சி மாநாட்டுக்கான முதலாவது செய்தியாளர் கூட்டம்
2023-05-17 18:28:59

சீன-மத்திய ஆசிய உச்சி மாநாட்டுக்கான ஊடக மையம் மே 16ஆம் நாள் முதலாவது செய்தியாளர்கள் கூட்டத்தை நடத்தியது. இவ்வுச்சி மாநாட்டின் முக்கியத்துவம், தொடர்புடைய நிகழ்ச்சிகள், சீன-மத்திய ஆசிய இயங்குமுறை கட்டுமானம் முதலியவை பற்றி அறிமுகம் செய்யப்பட்டது.

சீன வெளியுறவு அமைச்சகத்தைச் சேர்ந்த ஐரோப்பா மற்றும் மத்திய ஆசிய விவகாரத் துறையின் துணைத் தலைவர் யூஜுன் கூறுகையில், இயங்குமுறையின் கட்டுமானம், பல்வேறு துறைகளின் ஒத்துழைப்பு, பொது அக்கறை கொண்ட முக்கிய சர்வதேச மற்றும் பிரதேச விவகாரங்கள் ஆகியவை குறித்து, நடப்பு உச்சி மாநாட்டில் பங்கெடுக்கும் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கருத்துகளை பரிமாறிக் கொள்ள உள்ளனர். மேலும், சீன-மத்திய ஆசிய நெடுநோக்கு நம்பிக்கை மற்றும் முக்கிய துறைகளிலுள்ள ஒத்துழைப்புகளை ஆழமாக்குவது குறித்த ஒத்த கருத்துகளை உருவாக்கவுள்ளனர். முக்கிய அரசியல் ஆவணங்களில் கையொப்பமிடவுள்ளனர் என்றார்.

சீன-மத்திய ஆசிய நாடுகளின் ஒத்துழைப்பு, 3வது தரப்புக்கு எதிராக அமையாது. பிரதேச நிலைத் தன்மை மற்றும் வளர்ச்சிக்கும், கூட்டுச் செழுமைக்கும் துணை புரியும் எந்த நடவடிக்கைக்கும் சீனா ஆதரவு அளிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.