புதிய பெய்தொவ் வழிகாட்டி செயற்கைக் கோள் ஏவுதல் வெற்றி
2023-05-17 17:11:45

 

சிச்சுவான் மாநிலத்திலுள்ள ஷிசாங் செயற்கைக் கோள் ஏவு மையத்தில் மே 17ஆம் நாள் முற்பகல் 10:47 மணிக்கு லாங்மார்ச்-3பி ஏவூர்தி மூலம் 56ஆவது பெய்தொவ் வழிகாட்டி செயற்கைக் கோளை சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

புவிநிலை சுற்றுவட்டப் பாதையில் இயங்கும் இந்தச் செயற்கைக் கோள், பெய்தொவ்-3 திட்டத்துக்கு முதலாவது துணைச் செயற்கைக் கோள் ஆகும். திட்டமிட்ட சுற்றுவட்டப் பாதையில் நிறைநிறுத்தப்பட்டு, குறிப்பிட்ட சோதனைகளை நிறைவேற்றிய பிறகு, இது பெய்தொவ் வழிகாட்டி முறைமையில் இணையும்.

பெய்தொவ் முறைமையின் சேவைத் திறனை மேலும் உயர்த்த உதவும் இச்செயற்கைக் கோள், பெய்தொவ் முறைமையின் சிறப்பு சேவைகளைப் பரவலாக்குவதற்கும், இம்முறைமையின் பெருமளவு பயன்பாட்டுக்கு ஆதரவளிப்பதற்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.