சீன-மத்திய ஆசிய ஊடகங்களின் உயர் நிலை பேச்சுவார்த்தை
2023-05-17 13:44:33

சீன-மத்திய ஆசிய உச்சிமாநாட்டை முன்னிட்டு, சீன-மத்திய ஆசிய ஊடகங்களின் உயர் நிலை பேச்சுவார்த்தை மற்றும் பரிமாற்றம் மே 16ஆம் நாள் பெய்ஜிங்கில் வெற்றிகரமாக நடைபெற்றது.  சீன ஊடகக் குழுமத்தால் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் 5 மத்திய ஆசிய நாடுகளின் முக்கிய செய்தி ஊடகங்களைச் சேர்ந்த விருந்தினர்கள் பங்கேற்றனர்.

சீன நவீனமயமாக்கல் மற்றும் மத்திய ஆசியா:புதிய வளர்ச்சி மற்றும் புதிய வாய்ப்பு என்ற கருப்பொருளை பற்றி அவர்கள் பரிமாறிக் கொண்டனர். மனிதகுலம் நவீனமயமாக்கலை நனவாக்குவதற்குச் சீனப் பாணி நவீனமயமாக்கல், புதிய தேர்வை வழங்கியுள்ளது என்றும், மத்திய ஆசிய நாடுகள் உள்ளிட்ட பல வளரும் நாடுகள் சுதந்திரமாகவும் தற்சார்பாகவும் நவீனமயமாகுதலை முன்மாதிரியாகச் செல்வதற்கு முன்தாதிரியாக இது விளங்கியுள்ளது என்றும் விருந்தினர்கள் தெரிவித்தனர்.