உலகப் பொருளாதார வளர்ச்சி பற்றிய மதிப்பீடு உயர்வு:ஐ.நா.
2023-05-17 16:58:17

"2023ஆம் ஆண்டிற்கான உலக பொருளாதார நிலைமை மற்றும் எதிர்பார்ப்பு" குறித்த புதிய அறிக்கையை ஐ.நா.வின் பொருளாதார மற்றும் சமூக விவகாரப் பிரிவு 16ஆம் நாள் வெளியிட்டது. இதில் 2023ஆம் ஆண்டின் உலக பொருளாதார வளர்ச்சி விகிதம் இவ்வாண்டின் தொடக்கத்தில் 1.9 சதவீதத்திலிருந்து 2.3 சதவீதமாக உயர்த்தப்படும். மேலும் 2024ஆம் ஆண்டின் வளர்ச்சி மதிப்பீடு 2.7 சதவீதத்திலிருந்து 2.5% ஆக குறைக்கப்படும்.

இந்த அறிக்கையில் 2023ஆம் ஆண்டின் சீனப் பொருளாதார வளர்ச்சி விகிதம் மீதான மதிப்பீடு ஆண்டின் தொடக்கத்தில் 4.8 சதவீதத்திலிருந்து 5.3 சதவீதமாக உயர்த்தப்படும்.

புதிய ரக கரோனா வைரஸ் பாதிப்பு, உக்ரைன் நெருக்கடி, காலநிலை மாற்றம், ஒட்டுமொத்த பொருளாதார நிலைமை முதலிய காரணிகளால், உலகப் பொருளாதாரம் நீண்டகாலமாக தாழ்ந்த நிலையிலான வளர்ச்சிக் கட்டத்தில் நுழையும் என்று இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.