ஷி ச்சின்பிங்-கசிம் ஜோமார்த் டோகயேவ் பேச்சுவார்த்தை
2023-05-17 19:02:25

சீன-மத்திய ஆசிய உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள ஷிஆன் நகருக்கு வருகை தந்துள்ள கஜகஸ்தான் அரசுத் தலைவர் கசிம் ஜோமார்த் டோகயேவுடன் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் 17ஆம் நாள் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஷி ச்சின்பிங் கூறுகையில்,

டோகாயேவின் வருகைக்கு வரவேற்பையும், 70ஆவது பிறந்த நாளுக்கு வாழ்த்துகளையும் ஷிச்சின்பிங் தெரிவித்தார். பிறந்த நாளில் சீனாவில் பயணம் மேற்கொள்வது இருநாட்டு உறவின் உயர் நிலை வளர்ச்சியைக் காட்டுகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், இருநாடுகள் பாரம்பரிய நட்புறவை வலுப்படுத்தி ஒன்றுக்கொன்று ஆதரவு அளித்து நலன் தரும் ஒத்துழைப்புகளை ஆழமாக்கி, சீன-கஜகஸ்தான் பொது சமூகத்தைக் கட்டியமைக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.