முதலாவது சீனா-மத்திய ஆசிய உச்சிமாநாடு
2023-05-17 11:08:06

மே 18 மற்றும் 19ஆம் நாட்களில் முதலாவது சீனா-மத்திய ஆசிய உச்சிமாநாடு சீனாவின் ஷான்சி மாநிலத்தின் சி ஆன் நகரில் நடைபெறவுள்ளது. நல்ல அண்டைவீட்டுக்காரர், நல்ல நண்பர்கள், நல்ல கூட்டாளிகள், நல்ல சகோதரர்கள் முதலியவை சீனாவிற்கும் ஐந்து மத்திய ஆசிய நாடுகளுக்கும் இடையிலான உண்மையான உறவாகும். தற்போது, சீனாவும் மத்திய ஆசியாவும் முக்கியமான வளர்ச்சி கட்டத்தில் உள்ளன. சீனப் பாணியுடைய நவீனமயமாக்கக் கட்டுமானத்தை முன்னேற்றச் சீனா பாடுபட்டு வருகின்றது. துரிதப்படுத்தக் கூடிய வளர்ச்சி நெடுநோக்கு திட்டத்தை முன்னேற்ற பாடுபட்டுள்ள மத்திய ஆசிய நாடுகள், சீனாவுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த எதிர்பார்க்கின்றன. இப்பின்னணியில், முதலாவது சீனா-மத்திய ஆசிய உச்சி மாநாடு சரியான நேரத்தில் நடைபெறுவது, இரு தரப்புகளுக்கிடையிலான நெடுநோக்கு பரஸ்பர நம்பிக்கையின் தொடர்ச்சியான ஆழத்தையும் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பின் தொடர்ச்சியான விரிவாக்கத்தையும் ஊக்குவிக்கும்.கடந்த 30 ஆண்டுகளில், சீனாவும் மத்திய ஆசிய நாடுகளும் எப்போதும் பரஸ்பரம் மதிப்பு அளித்து வருகின்றன. ஒன்றுக்கு ஒன்று நலன் தந்து கூட்டாக வெற்றி பெற்று, சர்வதேச உறவுகளின் புதிய மாதிரியாகத் திகழ்கின்றன. தற்போது, 6 நாடுகளின் அரசுத் தலைவர்கள் சி ஆன் நகரில் ஒன்று திரண்டு, எதிர்கால வளர்ச்சியைக் கூட்டாகத் தேடி, மேலும் நெருங்கிய பொது எதிர்காலத்தைக் கூட்டாக உருவாக்குவார்கள். மேலும் எதிர்பார்க்கப்பட்ட அடுத்த " 30 ஆண்டு பொற்காலத்தை" உருவாக்குவது உறுதி என்பது குறிப்பிடத்தக்கது.