பெய்ஜிங்கில்“ஒளிவீசும் மத்திய அச்சு”என்னும் கண்காட்சி
2023-05-17 19:12:51

7.8 கிலோமீட்டர் நீளமுடைய பெய்ஜிங் மாநகரின் மத்திய அச்சு, தற்போது உலகத்தில் மிக முழுமையாகப் பாதுகாக்கப்பட்ட மிக நீளமான நகர மத்திய அச்சு ஆகும். பெய்ஜிங் தலைநகராக அமைக்கப்பட்ட 870ஆவது ஆண்டு நிறைவை நினைவு கூரும் வகையில், “ஒளிவீசும் மத்திய அச்சு”என்னும் கண்காட்சி அண்மையில் பெய்ஜிங் கேபிடல் அருங்காட்சியகத்தில் துவங்கியது. பெய்ஜிங் அரண்மனை அருங்காட்சியகம், லூவோயாங் அருங்காட்சியகம் உள்ளிட்ட 17 அருங்காட்சியகங்களைச் சேர்ந்த தொல் பொருட்கள் 53 பிரிவுகளாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.