சீன-மத்திய ஆசிய நாடுகளின் பன்முக ஒத்துழைப்பு
2023-05-17 17:39:00

மத்திய ஆசியாவில் அமைதி, நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பு மண்டலம் பற்றிய ஐ.நா பொது பேரவையின் பரிசீலனையில், ஐ.நாவுக்கான சீனத் துணை நிரந்தர பிரதிநிதி டாய்பிங் மே 16ஆம் நாள் ஐ.நா பொது பேரவையில் கூறுகையில், மத்திய ஆசிய நாடுகளுடன் பன்முக ஒத்துழைப்புகளை இடைவிடாமல் விரிவுபடுத்தி, இரு தரப்புறவைப் பதிய கட்டத்துக்கு கொண்டு செல்ல சீனா விரும்புகிறது என்றார்.

சீன-மத்திய ஆசிய உச்சி மாநாடு மே 18 மற்றும் 19ஆம் நாள் ஷிஆன் நகரில் நடைபெறவுள்ளது. மேலும் நெருங்கிய சீன-மத்திய ஆசிய பொதுச் சமூகத்தை உருவாக்கும் முக்கிய நடவடிக்கையான இது. மத்திய ஆசிய நாடுகளின் வளர்ச்சிக்கும், பிரதேச ஒத்துழைப்புக்கும் புதிய வாய்ப்புகளையும் இயக்காற்றலையும் வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.