சீன பொருளாதார வளர்ச்சியின் மீது ஐ.நாவின் நம்பிக்கை
2023-05-17 18:32:00

2023ஆம் ஆண்டு சீன பொருளாதார அதிகரிப்பு பற்றிய மதிப்பீடு ஐ.நாவின் அறிக்கை ஒன்றில் உயர்த்தப்பட்டது. இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் வாங் வென்பின் 17ஆம் நாள் கூறுகையில்,

இவ்வாண்டு சீன பொருளாதார அதிகரிப்பு பற்றிய மதிப்பீட்டை அண்மையில், உலக வங்கி சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. சீன பொருளாதார வளர்ச்சியின் மீதான நம்பிக்கையை இது காட்டுகிறது என்றார்.

சீன பொருளாதார வளர்ச்சி ஆற்றலும் வாய்ப்புகளும் அதிகரித்து வருவதோடு, உலக பொருளாதார மீட்சிக்கு சீனா தொடர்ந்து நம்பிக்கை மற்றும் ஆற்றலை வழங்கும். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழில் நிறுவனங்கள் சீன சந்தையில் செயல்பட்டு, எதிர்காலத்தை வெல்ல சீனா வரவேற்கின்றது என்றும் அவர் தெரிவித்தார்.