ஷிஆன் வந்தடைந்த கிர்கிஸ்தான் அரசுத் தலைவர்
2023-05-17 19:12:05

கிர்கிஸ்தான் அரசுத் தலைவர் சடிர் ஜபரோவ் மே 17ஆம் நாளிரவு ஷிஆன் நகரை வந்தடைந்தார். சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கின் அழைப்பின் பேரில் அவர் மே 17 முதல் 20ஆம் நாள் வரை சீன-மத்திய ஆசிய உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளவும், சீனாவில் அரசு முறை பயணம் மேற்கொள்ளவும் உள்ளார்.