சீன-உக்ரைன் உறவு பற்றிய சீனாவின் நிலைப்பாடு
2023-05-18 17:08:15

யுரேசிய விவகாரத்துக்கான சீனாவின் சிறப்புப் பிரதிநிதி லீஹுய் உக்ரைனில் மேற்கொண்ட பயணம் குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் மே 18ஆம் நாள் கூறுகையில், இப்பயணத்தின்போது, உக்ரைன் அரசுத் தலைவருடன் லீஹுய் சந்திப்பு நடத்தினார். அத்துடன், அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகளுடன் லீஹுய் சந்திப்பு நடத்தினார். அரசியல் வழிமுறையின் மூலம் உக்ரைன் நெருக்கடியைத் தீர்ப்பது, சீன-உக்ரைன் உறவு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து இரு தரப்பினரும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். அண்மையில், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் உக்ரைன் அரசுத் தலைவருடன் தொடர்பு கொண்டது, சீன-உக்ரைன் உறவின் வளர்ச்சிக்கு வழிகாட்டியுள்ளது. இரு நாடுகளும் கூட்டாக முயற்சிகளை மேற்கொண்டு, ஒன்றுக்கொன்று மதிப்பு அளித்து, இரு நாட்டு ஒத்துழைப்புகளைத் தொடர்ச்சியாக முன்னேற்ற வேண்டுமென இரு தரப்பும் கருதியுள்ளன என்றார்.