கடன் நெருக்கடி நாட்டுக்கும் மக்களுக்கும் அழிவு தரும் விளைவு ஏற்படுத்தும்: ஜோ பைடன்
2023-05-18 16:01:22

அமெரிக்கா தனது கடன் பொறுப்பை நிறைவேற்றவில்லை என்றால், நாட்டின் பொருளாதாரத்துக்கு மட்டுமல்ல அமெரிக்க மக்களுக்கும் அழிவு தரும் விளைவுகளை ஏற்படுத்தும் என்பது அரசுக்குத் தெரியும் என்று அந்நாட்டின் அரசுத் தலைவர் ஜோ பைடன் 17ஆம் நாள் தெரிவித்தார்.

கடன் பொறுப்பை நிறைவேற்றினால், வரவுச் செலவுப் பிரச்சினைகள் குறித்து உடன்படிக்கை உருவாக்கப்பட முடியும் என்று 16ஆம் நாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நடத்திய கூட்டத்தில் அனைவரும் ஒருமனதாக தெரிவித்தனர். மேலும், வரும் சில நாட்களில் கடன் உச்ச வரம்பு பற்றி உடன்படிக்கை உருவாகும் வரை நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தொடர்ந்து விவாதிக்கப் போவதாகவும் பைடன் கூறினார்.