தைவான் சுதந்திர சக்திக்கு அளிக்கும் ஆதரவை அமெரிக்காவும் ஜப்பானும் நிறுத்த வேண்டும்
2023-05-18 17:19:21

பேச்சுவார்த்தையின் மூலம் தைவான் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்ற கருத்தை ஜி7 அமைப்பு உச்சி மாநாட்டில், ஜப்பானின் அரசுத் தலைவர் கிஷிடா பகிர்ந்து கொள்ள உள்ளதாக செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் வாங் வென்பின் கூறுகையில்,

ஒரே சீனா என்ற கொள்கையைக் காட்டிய 1992 பொது கருத்தை தைவான் ஜனநாயக முன்னேற்ற கட்சி ஏற்றுக்கொள்ளவில்லை. இது தைவான் நீரிணையின் அமைதி மற்றும் நிதானத்துக்கு அச்சுறுத்தலாகும். ஒரே சீனா என்ற கொள்கையைப் பின்பற்றாத அமெரிக்கா ஜப்பான் உள்ளிட்ட சில நாடுகள், தைவான் நீரிணை நெருக்கடியான நிலைமைக்குப் பொறுப்பு ஏற்க வேண்டும் என்றார்.