சீன-மத்திய ஆசிய உறவுக்கு சீன-மத்திய ஆசிய உச்சிமாநாட்டின் பங்கு
2023-05-18 17:31:40

சீன-மத்திய ஆசிய பொது எதிர்காலச் சமூகத்தின் கூட்டுக் கட்டுமானத்துக்கு சீன-மத்திய ஆசிய உச்சிமாநாட்டின் பங்கு பற்றிய கேள்விக்கு, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் மே 18ஆம் நாள் பதிலளிக்கையில், சீனாவுக்கும் 5 மத்திய ஆசிய நாடுகளுக்கும் இடையே பன்முக நெடுநோக்கு கூட்டுறவு உருவாக்கப்பட்டு, மனிதகுல பொது எதிர்காலச் சமூகத்தின் உருவாக்கம் பற்றிய முன்னெடுப்பும் நறைமுறைக்கு வந்துள்ளது என்று தெரிவித்தார்.

சீன-மத்திய ஆசிய உச்சிமாநாடு, இருதரப்பு உறவின் வளர்ச்சி வரலாற்றில் மைல் கல் முக்கியத்துவம் வாய்ந்தது மட்டுமல்ல, மேலும் நெருக்கமான சீன-மத்திய ஆசிய பொது எதிர்காலச் சமூகத்தை உருவாக்குவதற்கும் முக்கிய நடவடிக்கையாகும். மனிதகுல பொது எதிர்காலச் சமூகத்தை முன்னேற்றுவதில் சிறந்த நடைமுறையாக திகழும் இம்மாநாடு ஆக்கப்பூர்வமான முன்மாதிரியாகப் பங்காற்றும் என்றும் அவர் குறிப்பிட்டார்.