சீன-மத்திய ஆசிய நாடுகளுக்கிடையிலான வர்த்தக தொகை அதிகரிப்பு
2023-05-18 16:09:37

கஜகஸ்தான் உள்ளிட்ட 5 மத்திய ஆசிய நாடுகளுடன் வர்த்தகப் பொருளாதார ஒத்துழைப்புகளை சீனா தொடர்ந்து ஆழமாக்கி வருகின்றது. இருதரப்பு வர்த்தகத்தின் அளவும் தரமும் அதிகரித்து வருகின்றது. சீன சுங்கத் துறை 17ஆம் நாள் வெளியிட்ட தகவலின் படி, இவ்வாண்டின் முதல் 4 மாதங்களில், சீனாவுக்கும் 5 மத்திய ஆசிய நாடுகளுக்கும் இடையேயான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொகை, 17 ஆயிரத்து 305 கோடி யுவானை எட்டியது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தை விட 37.3 விழுக்காடு அதிகம். ஏப்ரல் திங்களில் மட்டும் ஏற்றுமதி இறக்குமதி தொகை 5027 கோடி யுவானை எட்டி, முதல் முறையாக 5000 கோடி யுவானைத் தாண்டியது குறிப்பிடத்தக்கது.