சீனாவின் செயற்கைக் கோள் வழிகாட்டி மற்றும் திசையறிதல் சேவைத் துறை உற்பத்தி மதிப்பு 50 ஆயிரம் கோடி யுவானைத் தாண்டுதல்
2023-05-18 15:58:38

2023 சீனாவின் செயற்கைக் கோள் வழிகாட்டி மற்றும் திசையறிதல் சேவைத் துறை வளர்ச்சிக்கான வெள்ளை அறிக்கையை சீனா மே 18ஆம் நாள் வெளியிட்டது. இவ்வெள்ளை அறிக்கையின்படி, 2022ஆம் ஆண்டில், இத்துறையின் மொத்த உற்பத்தி மதிப்பு 50 ஆயிரத்து 70 கோடி யுவானை எட்டி, கடந்த ஆண்டைக் காட்டிலும் 6.76 விழுக்காடு அதிகரித்துள்ளது.

பெய்தொவ் வழிகாட்டிச் செயற்கைக் கோள் முறைமையின் சேவை 2020ஆம் ஆண்டில் தொடங்கிய பிறகு, அதற்கான பல்வேறு துறைகளின் தேவையும் முதலீடும் உயர்ந்து வருகின்றன. 2022ஆம் ஆண்டில், இத்துறை சீரான வளர்ச்சி போக்கை நிலைநிறுத்தி, கட்டமைப்பை மேம்படுத்தி, தொழில் அளவையும் விரிவாக்கியுள்ளது. தரவுகளின்படி, தொடர்புடைய சிலிக்கான் சில்லு உட்பட முக்கிய பொருட்களின் உற்பத்தி மதிப்பு 15 ஆயிரத்து 270 கோடி யுவானைத் தாண்டியுள்ளது.