சீன-தஜிகிஸ்தான் அரசுத் தலைவர்கள் பேச்சுவார்த்தை
2023-05-18 15:09:42

சீன-மத்திய ஆசிய உச்சி மாநாட்டில் பங்கேற்கவும், சீனாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவும் வருகை தந்துள்ள தஜிகிஸ்தான் அரசுத் தலைவர் எமோமோலி ரஹ்மோனுடன், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மே 18ஆம் நாள் வியாழக்கிழமை சி ஆன் நகரில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஷிச்சின்பிங் கூறுகையில், சீனாவுக்கும் தஜிகிஸ்தானுக்கும் இடையே தூதாண்மை உறவு நிறுவப்பட்ட பின், இரு தரப்புகளின் கூட்டு முயற்சியுடன், இரு நாடுகள், சமூக அண்டை நாட்டு நட்புறவிலிருந்து நெடுநோக்குக் கூட்டாளியுறவு வழியாக, பன்முக நெடுநோக்குக் கூட்டாயளியுறவாகியுள்ளன என்று தெரிவித்தார். புதிய நிலைமையில், தஜிகிஸ்தானுடன் இணைந்து, பல்வேறு துறைகளிலான ஒத்துழைப்பு நிலையை உயர்த்தி, தலைமுறை நட்பு, ஒன்றாக பொறுப்பேற்றல், ஒன்றுக்கு ஒன்று கூட்டு வெற்றி பெறுதல் ஆகியவற்றைக் கொண்ட சீன-தஜிகிஸ்தானின் கூட்டு எதிர்கால சமூகத்தின் உருவாக்கத்தை முன்னேற்ற சீனா விரும்புவதாக ஷிச்சின்பிங் தெரிவித்தார்.