சீன-கசக்ஸ்தான் கூட்டு ஒத்துழைப்புச் செய்தி நிகழ்ச்சியின் தொடக்கம்
2023-05-19 10:30:28

சீன-மத்திய ஆசிய உச்சிமாநாட்டுக்கு முன்பு, ஆசியா-ஐரோப்பாவுக்கான சீன ஊடகக் குழுமத்தின் அலுவலகமும், கசக்ஸ்தானின் அடாமேகன் தொலைகாட்சி நிலையமும் கூட்டாக தயாரித்த கசக்ஸ்தான் மொழியிலான 2 செய்தி நிகழ்ச்சிகள், உள்ளூர் நேரப்படி 17ஆம் நாள் அந்நாட்டில் அதிகாரப்பூர்வமாக ஒளிபரப்பப்பட்டுள்ளது. இரு நாடுகளின் செய்திஊடங்கள் கூட்டாகத் தயாரித்துள்ள செய்தி நிகழ்ச்சிகள் அந்நாட்டில் இயல்பாகு ஒளிபரப்படுவது இதுவே முதன்முறையாகும்.