ஷிஆன் நகரில் பெங் லியுவான் மற்றும் மத்திய ஆசிய விருந்தினர்களின் கலாச்சார அனுபவம்
2023-05-19 19:54:29

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கின் மனைவி பெங் லியுவானின் அழைப்பை ஏற்று, கிர்கிஸ்தான் அரசுத் தலைவரின் மனைவி ஜபரோவா, உஸ்பெகிஸ்தான் அரசுத் தலைவரின் மனைவி மிர்ஸியோயேவா ஆகியோர் பழைய ஷான்சி நாடக மன்றமான ஷிஆன் மரபு மாற்றச் சங்கத்தைப் பார்வையிட்டனர்.

சீன ஷான்சி நாடக கலை அருங்காட்சியகத்தை முதலில் பார்வையிட்ட அவர்கள், ஷான்சி நாடகத்தின் வரலாறு மற்றும் வளர்ச்சி பற்றி அறிந்து கொண்டனர். அதற்குப் பிறகு, மரபு மாற்றச் சங்கத்தின் காட்சியகத்தில் தோற்பாவை தயாரிப்பு நுட்பத்தை அனுபவித்தனர். மேலும், நாடக அரங்கில் தலைசிறந்த ஷான்சி நாடக நிகழ்ச்சியையும் அவர்கள் கண்டு மகிழ்ந்தனர்.

அப்போது, மத்திய ஆசிய நாடுகளுடன் பண்பாடு மற்றும் கலை பரிமாற்றத்தையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்தி, மக்களுக்கிடையே புரிந்துணர்வு மற்றும் நட்புறவை முன்னேற்ற விரும்புவதாக பெங் லியுவான் தெரிவித்தார். சீனத் தேசத்தின் சிறந்த பாரம்பரிய பண்பாட்டின் பாதுகாப்பு மற்றும் பரவலைப் பாராட்டிய ஜபரோவா மற்றும் மிர்ஸியோயேவா, இருதரப்பு பண்பாட்டு மற்றும் நாகரிக பரிமாற்றத்தை வலுப்படுத்த வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர்.