கானாவின் கடன் நெருக்கடி சமாளிப்பில் சீனாவின் ஆதரவிற்கு நன்றி தெரிவித்த ஐ.எம்.எஃப் பிரதிநிதி
2023-05-19 15:44:07

கானாவுக்கான சீனத் தூதர் லூகுன் அண்மையில் சர்வதேச நாணய நிதியத்தின் கானாவுக்கான பிரதிநிதி லியான்ட்ரோ மதீனாவைச் சந்தித்துரையாடினார்.

கானாவின் கடன் நெருக்கடி சமாளிப்பில் சீன அரசின் ஆக்கப்பூர்வமான ஆதரவுக்கு மதீனா நன்றி தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியம், சீனாவுடன் ஒத்துழைப்பை மேலும் ஆழமாக்கி கானாவின் கடன் நெருக்கடியைத் தீர்ப்பதற்கு தொடர்ந்து பங்காற்ற விரும்புவதாக அவர் கூறினார்.