ஜப்பானிய-அமெரிக்க தலைவர்களின் பேச்சுவார்த்தைக்கு ஜப்பானிய மக்கள் எதிர்ப்பு
2023-05-19 16:02:07

ஜப்பானிய தலைமையமைச்சர் ஃபுமியோ கிஷிடா அமெரிக்க அரசுத் தலைவர் ஜோ பைடனுடன் மே 18ஆம் நாள் ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் பேச்சுவார்த்தை நடத்தினார். ஜப்பான்-அமெரிக்கக் கூட்டணியின் பயமுறுத்தல் சக்திகளை வலுப்படுத்துவது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து இரு தரப்பினரும் கலந்தாய்வு நடத்தினர். அத்துடன், அமெரிக்க-ஜப்பான்-தென் கொரிய ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்தவும் அவர்கள் முடிவு செய்தனர்.

இப்பேச்சுவார்த்தைக்கும், விரைவில் நடைபெறவுள்ள ஜி7 உச்சி மாநாட்டுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் விதம், சுமார் 100 ஜப்பானியர்கள் 17 மற்றும் 18ஆம் நாளில் பேரணி நடத்தினர்.