சீன-மத்திய ஆசிய நாடுகளின் உச்சிமாநாட்டில் பெறப்பட்டுள்ள சாதனைகள்
2023-05-20 16:58:25

சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான சின் காங் 19ஆம் நாள் சீன-மத்திய ஆசிய நாடுகளின் உச்சிமாநாடு குறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில், மேலும் நெருங்கிய சீன-மத்திய ஆசிய நாடுகளின் பொது எதிர்காலத்தை உருவாக்குவது, நடப்பு உச்சிமாநாட்டில் எட்டப்பட்ட மிக முக்கிய அரசியல் சாதனையாகும். சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் இந்த உச்சிமாநாட்டில் நிகழ்த்திய உரையில் சர்வதேசச் சமூகத்துக்கு மத்திய ஆசிய நாடுகளின் மீதான சீனாவின் தூதான்மைக் கொள்கையை விளக்கினார். இது மத்திய ஆசிய நாட்டு அரசுத் தலைவர்களின் பாராட்டுகளையும் உற்சாகமான பதிலையும் பெற்றது. இக்காலத்தில் பல்வேறு துறைகளில் 100க்கும் மேற்பட்ட ஒத்துழைப்பு உடன்படிக்கைகளில் சீனாவும் மத்திய ஆசிய நாடுகளும் கையொப்பமிட்டுள்ளன. அதோடு, இவ்வுச்சி மாநாட்டில் பெறப்பட்டுள்ள ஏராளமான சாதனைகளும் செல்வாக்கும் முன்னென்றும் கண்டிராதவை என்று சின் கேங் கூறினார்.