சீன-மத்திய ஆசிய பங்கு உலகிற்குத் தேவை
2023-05-20 17:01:12

சீன-மத்திய ஆசிய அமைப்பு முறை உருவாக்கப்பட்ட 3 ஆண்டுகளில் நடத்தப்பட்ட முதலாவது உச்சிமாநாடு, உலகின் பொதுக் கவனத்தை  ஈர்த்துள்ளது. இவ்வுச்சிமாநாட்டில் சீனா முன்வைத்த ஒன்றுக்கொன்று உதவியளிப்பதில் ஊன்றி நிற்றல், கூட்டு வளர்ச்சியில் ஊன்றி நிற்றல், பொதுப் பாதுகாப்பில் ஊன்றி நிற்றல், தலைமுறை நட்பில் ஊன்றி நிற்றல் ஆகிய 4 முன்மொழிவுகள், சீன- மத்திய ஆசிய பொது எதிர்காலச் சமூகத்தின் உருவாக்கத்துக்கு, அடிப்படை வழிகாட்டியை வழங்கியுள்ளன.

இதனிடையில், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவு, நெருங்கிய சீன-மத்திய ஆசிய ஒத்துழைப்புக்கான இணைப்பாகத் திகழ்கின்றது. இம்முன்மொழிவை, தத்தமது முன்மொழிவுகள் மற்றும் வளர்ச்சி திட்டங்களுடன் ஒன்றிணைக்க விரும்புவதாக மத்திய ஆசிய நாடுகள் தெரிவித்தன.

சிக்கல் மற்றும் கடினமான சர்வதேசச் சூழ்நிலையில், திறப்பு மற்றும் உள்ளடக்கத் தன்மை வாய்ந்த சீன-மத்திய ஆசிய ஒத்துழைப்பு, பிராந்தியம் மற்றும் உலகிற்கு ஆக்கப்பூர்வமான விளைவைக் கொண்டு வரும். சி அன் அறிக்கையின்படி, மைய நலன்கள் தொடர்புடைய பிரச்சினைகள் குறித்து, ஒன்றுக்கொன்று புரிந்துணர்வு மற்றும் ஆதரவு அளிப்பதை, பல்வேறு தரப்புகள் மீண்டும் உறுதிப்படுத்தின. மத்திய ஆசிய நாடுகள், உலகின் வளர்ச்சி, பாதுகாப்பு, நாகரிகம் ஆகியவை பற்றிய முன்மொழிவுகளைப் பாராட்டியதோடு, அவற்றைச்  செயல்படுத்தவும் விருப்பம் தெரிவித்தன. மேலும், பலதரப்புவாதம், பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச சட்டம் மற்றும் உறவுக் கோட்பாடுகளையும் சர்வதேச நியாயத்தையும், உறுதியாகப் பேணிக்காத்து, சர்வதேச ஒழுங்கு மற்றும் மேலாண்மை முறைமை, மேலும் நேர்மையான திசை நோக்கி, வளர்வதை முன்னெடுக்க விரும்புவதாகவும் பல்வேறு தரப்புகள் தெரிவித்துள்ளன.