ரூ. 2000 நோட்டுகளைத் திரும்பப் பெற்றது இந்திய ரிசர்வ் வங்கி
2023-05-20 17:01:00

2000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறுதல் தொடர்பான அறிவிப்பை இந்திய ரிசர்வ் வங்கி 19ஆம் நாள் வெளியிட்டுள்ளது. அதில், 2000 நோட்டுகளை விநியோகிப்பதை நிறுத்துவதெனவும் தெரிவிக்கப்பட்டது.

பொது மக்கள் 2000 நோட்டுகளை வங்கி கணக்கில் சேமிக்கலாம் அல்லது இதர நோட்டுகளாகப் பரிமாற்றம் செய்யலாம் என்று குறிப்பிட்டுள்ள இந்திய ரிசர்வ் வங்கி, செப்டெம்பர் 30ஆம் நாளுக்கு முன் அனைத்து வங்கிகளும் மக்களின் சேமிப்பு மற்றும் பரிமாற்றத் தேவைக்குரிய வசதி அளிக்க வேண்டும் என்றும்  உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக 2016ஆம் ஆண்டு நவம்பர் திங்களில், 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை மதிப்பிழக்கச் செய்வதாக இந்திய அரசு திடீரென அறிவித்தது. இது நாடளவில் பெரும் அளவிலான ஆர்ப்பாட்டங்களை ஏற்படுத்தியது நினைவுக் கூரத்தக்கது.