7ஆவது உலக நுண்ணறிவு மாநாட்டில் ஒப்பந்தத் தொகை 8150 கோடி யுவான்
2023-05-21 16:53:04

மே 18ஆம் நாள் தியன்ஜின் மாநகரில் துவங்கிய 7ஆவது உலக நுண்ணறிவு மாநாட்டில், 98 முக்கியத் திட்டப்பணிகளின் ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டுள்ளன. இத்திட்டப்பணிகளின் மொத்த ஒப்பந்தத் தொகை 8150 கோடி யுவானை எட்டியது. புதிய தலைமுறை தகவல் தொழில் நுட்பம், வாகனம், உயிரின மருத்துவம், சாதனத் தயாரிப்பு, புதிய எரியாற்றல், புதிய மூலப்பொருட்கள் முதலிய தொழில்கள் சார்ந்து இவ்வொப்பந்தங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

உலகளவில் 51 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் ஆயிரம் பிரமுகர்கள், நிபுணர்கள், அறிஞர்கள், தொழில் முனைவோர் முதலியோர், இம்மாநாட்டில் கலந்து கொண்டனர்.